மீண்டும் அட்மிரால் கரன்னாகொடவிடம் விசாரணை!

254 0

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொடவிடம் நான்காவது தடவையாக அடுத்த வாரம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குற்றப் புலனயவுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணை அறை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, நேற்று கோட்டை நீதிவானுக்கு அறிவித்தார்.

முன்னதாக  சி.ஐ.டி. இறுதியாக கடந்த மார்ச் 19 ஆம் திகதி  3 ஆவது தடவையாக கரன்னாகொடவை விசாரித்திருந்தது.  இதன்போது அவரிடம்  4 மணி நேரம் தீவிர விசாரணை இடம்பெற்றிருந்தது.  அதற்கு முன்னர்  கடந்த 11 ஆம் திகதி திங்களன்று 8 மணி நேரம் விசாரணை செய்த சி.ஐ.டி. கடந்த 13 ஆம் திகதி  மீளவும் அவரை ஆறு மணி நேரம் விசாரித்து வாக்கு மூலம் பெற்றிருந்தது. 

இந் நிலையிலேயே  சி.ஐ.டி.யினர் மீண்டும் அவரிடம் அடுத்த மாதம் 4 ஆம் திகதி விசாரணை செய்யவுள்ளது.