சட்டவிரோத போதைப்பொருளுக்கு ஈராண்டுகளில் தீர்வு-சிறிசேன

228 0

சட்டவிரோத மதுபானங்கள் எதிர்வரும் இரண்டு வருடங்களில் முற்றாக ஒழிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மேல்மாகாணம், கிழக்கு, தென் மாகாணங்களின் கரையோர பிரதேசங்கள் மற்றும் கொழும்பு நகர் ஆகியன போதைப்பொருள் பாவனை அதிகமாக காணப்படும் இடங்களாக காணப்படுகின்றன.

இதனை கட்டுப்படுத்த பொலிஸாரும், முப்படையினரும் இணைந்து நகர் பகுதியில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை விட, சிறந்ததொரு வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

அத்துடன், சட்டவிரோத மதுபானங்களை நாட்டில் இருந்து ஒழிப்பதற்கு பொலிஸாருக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.