பயங்கரவாத தடைசடத்திற்கு மாற்றான சட்டம் – அடுத்த வாரம் அமைச்சரவையில்

379 0

prisoner-in-jail-cell-prison-626x380-415x260பயங்கரவாததடை சட்டத்திற்கு மாற்றீடாக சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்டமூலம் எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த சட்டமூலமானது தற்சமயம், அமைச்சரவை செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சட்ட ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரட்நாயக்காவின் ஒத்துழைப்புடன் புதிய சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூல தயாரிப்பிற்று முப்படையின் பிரதானிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.