கண்டி பிரதேசத்தில் நீர் விநியோக தடை

378 0

waterபொல்கொல்ல – உகுவெல நிலத்தின்கீழ் நீர் கொண்டு செல்லும் குழாயின் திருத்தப்பணிகள் காரணமாக, இன்று இரவு 9 மணி தொடக்கம் 36 மணிநேரம், கண்டியின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகால் அமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய பாததும்பர, ஹாரிஸ்பத்துவ, அகுரன, குண்டசாலை, லேவெல்ல, அமுனுகம மற்றும் வலல ஆகிய பிரதேசங்களிலேயே நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.