இந்தியாவில் உள்ள ஓர் ஆலயத்தில் மீசைவைத்த புத்தர் சிலை காணப்படுகின்றது.
துறையூரில் இருந்து முசிறி செல்லும் வழியில் ஆராய்ச்சி என்ற ஊரில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மங்கலம் என்னும் பகுதியில் அரவாண்டியம்மன் கோயில் அமைந்துள்ளது.
குறித்த கோயிலில் காணப்படும் இந்த மீசைவைத்த புத்தர் சிலை 5 அடி 7 அங்குலம் பெரிதானது.
இந்த புத்தருக்கு இந்து முறைப்படி வழிபாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தமிழ்நாட்டில் பல இடங்களில் புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் மீசை வைத்த புத்தரின் முதல் சிலை இதுவே என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.