தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட சுமார் 6000 படையதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டமைக்காக இந்தப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
புலிகளுக்கு எதிரான போரில் பங்களிப்பு செய்தமைக்காக இம்முறை இறுதியாக பதக்கம் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதனிடையே, இராணுவத் தளபதி, படைத் தளபதிகள் போன்றோர் பரிந்துரை செய்த பதக்கம் பெறுவோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாட்டின் படைச் சேனாதிபதி என்ற வகையில் இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 24ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இராணுவ பதக்கம் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
சுமார் 6000 படையதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.