அமைச்சர்களை கண்காணிக்க விசேட இரகசிய குழு

318 0

1064217312yappuஅமைச்சர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு விசேட குழு ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

அனைத்து அமைச்சர்களின் செயற்பாடுகள் மற்றும் வினைத்திறன் தொடர்பில் கண்காணிப்பதற்காக இந்த விசேட குழு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட குழு அமைச்சர்களின் வினைத்திறன் மற்றும் செயற்பாடுகள் குறித்து ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு தடவையும் அறிக்கை ஒன்றை பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.