ஜெயலலிதா கண் திறந்து பார்த்தார் – எனினும் பேச முடியாது

294 0

cm-viruthunagar-sivagangai-pracharam-bigமுதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாகவும் கண் திறந்து பார்த்ததாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22ஆம் திகதி மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

நுரையீரலில் நீர் கோர்த்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டது என மருத்துவர்கள் முடிவு செய்து அதற்கேற்ப சிகிச்சை அளித்தனர்.

செயற்கை சுவாசம் – கடந்த செவ்வாய்கிழமை வரை காய்ச்சல் இருந்து வந்தது. மருத்துவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வென்டிலேட்டர் பொருத்தினர்.

இதன்மூலம் நுரையீரலுக்கும் இருதயத்திற்கும் அதிக பளு கொடுக்காமல் இருக்க செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நுரையீரலும் இருதயமும் சிரமமின்றி செயல்பட்டன.

நுரையீரலில் ஏற்பட்ட தொற்றை குறைக்க முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதல்வருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோளாறு, நீரிழிவு நோய் இருந்ததால் அவருக்கு கவனமாக மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவரால் பேச முடியாமல் இருக்கின்றது.

ஆனால், முதல்வர் சுயநினைவுடன் தான் இருக்கிறார். கண் திறந்து பார்த்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.