அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவிருக்கும் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக துணை தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஓமான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கும் நிலையில் அது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த அசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிப்பொருள் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சீமெந்து உற்பத்தி நிலையங்களினால் கடந்த அரசாங்கத்தால் செய்யப்பட்ட நிர்மாணிங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட போவதில்லை.
மாறாக மஹிந்த அரசாங்கத்தினால் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் வருமானத்தை அதிகப்பதற்கான ஒரு மாற்று வழிமுறையாகவே அம்பாந்தோட்டையில் இவை அமையப்பெறும்.
தற்போது இலங்கையின் ஏற்றுமதி பொருளாதார வருமானம் 17 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்த எரிப்பொருள் சத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தவுடன் ஏற்றுமதி பொருளாதாரத்தின் வருமானத்தை மேலும் 7 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க கூடியதாக இருக்கும் என்றார்.Share