ஜெனிவாவில் சுமந்திரன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான மஹிந்த அமரவீர, வடக்கு மக்களும் எமது பிரஜைகள் என்று நினைத்தே அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் மனோ தித்தவல தலைமையிலான குழு ஜெனிவா சென்றிருந்தால் நாட்டுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.