2020ஆம் ஆண்டில் இலங்கை நிலக்கண்ணி வெடி அற்ற நாடாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டேஷ்’ நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஆனந்த சந்திரசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டில் இலங்கையை நிலக்கண்ணி வெடி அற்ற நாடாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஜப்பான் அரசாங்கம் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக 11.5 கோடி ரூபா வழங்கியுள்ளது.
இந்த உதவியைப் பயன்படுத்தி இலங்கையை நிலக்கண்ணி வெடிகள் அற்ற நாடாக உருவாக்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.