காலி – பெலிகஹ சந்திக்கருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (26) அதிகாலை கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
முகத்தை மறைத்தவாறு மோட்டார் சைக்கிளில் வருகைதந்த மூவரே இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டதாகத் தெரிவித்த பொலிஸார், கொள்ளையிடப்பட்ட பணத்தொகை தொடர்பில் இன்னமும் தெரியாத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்தனர்.