இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த, 13 வயது சிறுமி, மாரடைப்பால் மரணமடைந்ததுள்ளார்.
தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில், எட்டாம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி ஆராதனாவே இவ்வாறு பலியாகியுள்ளார்.
இவரது குடும்பத்தினர், நகைத்தொழில் செய்து வருகின்றனர்.
ஆராதனா, சமண மத வழக்கப்படி, ஹைதராபாத் நகரில், 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
உண்ணாவிரதம் முடித்த போது மிகவும் சோர்வாக காணப்பட்ட அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இரண்டு நாட்களில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தார்.