அவசர திருத்தப் பணிகளின் காரணமாக கொழும்பின் சில பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று இரவு 9 மணி தொடக்கம், ஒன்பது மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படுவதுடன், கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக சபையால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு – கோட்டை மற்றும் புறகோட்டை ஆகிய பகுதிகளில் இன்று, நீரானது மிகவும் குறைந்தளவிலேயே விநியோகிக்கப்படுமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.