சுதந்திரக் கட்சியின் செயற்பாடு பேச்சுவார்த்தைக்கு தடையாக அமையும்-பெரமுன

240 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, வரவு- செலவுத்திட்ட வாக்கெடுப்பில் விலகியிருப்பது தமது கட்சியுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைக்கு தடையாக அமையுமென பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று வழங்கியிருந்த நேர்காணலொன்றிலேயே ஜி.எல்.பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“வரவு- செலவுத்திட்டத்தின் முதலாவது வாக்கெடுப்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கலந்துகொள்ளவில்லை.

மேலும் இவர்கள் எதிர்க்கட்சியில் இருப்பதாக அண்மையில் தெரிவித்தனர். இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  இவ்வாறு செயற்படுவது ஏற்புடையதல்ல. அத்துடன் நம்பிக்கை அடிப்படையிலேயே நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

சுதந்திரக் கட்சி சிந்திக்காமல் தொடர்ந்து செயற்படுமாயின் அது பேச்சுவார்த்தைக்கு தடையாக அமையும்” என ஜீ.எல்.பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.