இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்த எப்-16 விமானத்தை பயன்படுத்தவில்லை – பாக். ராணுவம் சொல்கிறது

320 0

இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்த எப்-16 விமானத்தை பயன்படுத்தவில்லை என பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது.

இந்திய போர் விமானங்கள், பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாமை தாக்கியதற்கு மறுநாள், இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இதற்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எப்-16 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது.இந்நிலையில், இதை பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது. அதன் செய்தித்தொடர்பாளர் ஆசிப் காபூர் கூறியதாவது:-

கடந்த மாதம் 26-ந் தேதி, இந்திய போர் விமானங்கள், பாகிஸ்தான் வான் பகுதிக்குள் ஊடுருவி வந்து குண்டுகளை போட்டன.

ஆனால், உயிரிழப்போ, உள்கட்டமைப்புக்கு எவ்வித சேதமோ ஏற்படவில்லை. இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்த நாங்கள் எப்-16 விமானத்தை பயன்படுத்தவில்லை. நாங்கள் பயன்படுத்தியது, சீனாவுடன் இணைந்து தயாரித்த ஜேஎப்-17 ரக விமானங்களைத்தான். இந்த விமானங்களை பயன்படுத்தியது பற்றி அமெரிக்காவிடம் தெரிவித்து விட்டோம். எங்களின் தற்காப்புக்கு எது சரியோ, அதை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.