மன்னார், கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்திலும் நிலவக்கூடிய வெப்ப எச்சரிக்கை அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த 3 மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்திலும் நாளைய தினம் ஆகக்கூடிய வெப்பநிலையை எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.