நாட்டில் பயன்படுத்தப்பட்டுவரும் வாகனங்களின் எண்ணிக்கை, 7 மில்லியனை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று இடம்பெற்றது.
இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பொது வாகனங்களை விட தனியார் வாகனங்களே வீதிகளை ஆக்கிரமித்துள்ளன. இதனால் கடும் வாகன நெருக்கடி ஏற்படுகின்றது.
எனவே வாகன நெருக்கடியைக் குறைப்பதற்கு பொது பயணிகள் போக்குவரத்தை நவீனமயப்படுத்த வேண்டியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.