தேசிய பாடசாலைகள் என்ற முறைமை, அதிகார பகிர்வை பலவீனப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டது என்றும் அத்தகைய தேவை இலங்கைக்கு இல்லையென்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வியமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டத்தினை வடக்கு மாகாண ஆளுநர் கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலையாக மாற்றுவதன் மூலம் மத்திய அரசாங்கம் தனது ஆளுகையினை மாகாணத்துக்குள் செலுத்தும் முகமாக இந்த செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கு வடக்கு மாகாண ஆளுநர் துணைபோவதாக எண்ணுகிறேன். எனவே வடக்கு மாகாணத்தின் அனைத்து தேசிய பாடசாலைகளும் மாகாண பாடசாலையாக மாற்றப்பட வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.