வடக்கில் 743 தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

290 0

rathakirishnan-44ddவடக்கு மாகாணத்தில் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றும் 743தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 10 வருடங்களாக தொண்டராசிரியர்களாக பணியாற்றிய தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு தொண்டராசிரியர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

மாகாண சபைகளுக்கு முன்பாகவும், முதலமைச்சர் அலுவலகங்களுக்கு முன்பாகவும் பல தடவைகள் போராட்டங்களில் ஈடுபட்டுவந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள், கடந்த 5 ஆம் திகதி கொழும்பிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் வடக்கு மாகாணத்தைச்சேர்ந்த 743 தொண்டர் ஆசிரியர்களுக்கும் கிழக்கு மாகணத்தைச் சேர்ந்த 443 தொண்டராசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.