மகிந்தராஜபக்ஷவை தேர்தலில் தோற்கடிப்பதற்காக பஷில் றோவுடன் இணைந்து செயற்பட்டார்

3293 21

4096821721சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்ஷவை தேர்தலில் தோற்கடிப்பதற்காக அவரது சகோதரரான பசில் ராஜபக்ஷ இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோவுடன் இணைந்து செயற்பட்டார் என விமல் வீரவன்ச கூறியதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரோ தெரிவித்துள்ளார்.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் செயற்பாடுகள் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவினார் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,

முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்ஷவுடன் நாங்கள் தொடர்ந்தும் இருந்தோம். அவருடன் செயற்பட்டோம். ஆனால் பசில் ராஜபக்ஷவின் செயற்பாட்டினால் 24 மணித்தியாலத்துக்குள் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. மகிந்த ராஜபக்ஷவை தேர்தலில் தோல்வியடையச் செய்வதற்காக பசில் ராஜபக்ஷ இந்திய றோ அமைப்புடன் இணைந்து செயற்படுவதாக விமல் வீரவன்ச ஊடகங்களைச் சுட்டிக்காட்டி கருத்து வெளியிட்டிருந்தார்.

இவ்வாறு மகிந்த ராஜபக்ஷவை நெருக்கடியில் தள்ளிவிட்டு வெளிநாட்டில் இருந்து சிறீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் வேலைகளில் ஈடுபட்டார். இருந்தபோதிலும் அது வெற்றியளிக்கவில்லை. தற்போதும் புதிய கட்சி ஒன்றுக்கான நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்து வருகின்றார். ஆனால், அது வெற்றியளிக்கப்போவதில்லை. கட்சியின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்படுகின்றனர் எனவும் கூறினார்.

Leave a comment