சாட்சியங்கள் மீதான விசாரணைகள் ஆரம்பம் – ஜனாதிபதி ஆணைக்குழு

255 0

2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்த சாட்சியங்கள் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறித்த விசாரணைகள் இன்று முதல் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆரம்பமாகவுள்ளன.

முதற்கட்டமாக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு ஒளடதங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து இன்று வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.

இதற்காக சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் ரோஹன டி சில்வாவை இன்று முற்பகல் 9.00 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

குறித்த ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை கையேற்கும் பணிகள் கடந்த 19ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தன.

அதற்கமைய குறித்த 3வருட காலப்பகுதிக்குள் 1142 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் அவற்றுள் 48 முறைப்பாடுகள் தொடர்பாக முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.