தென் கடற்பரப்பில் ஹெரொயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜைகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இன்று குறித்த 9பேரும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சந்தேக நபர்களை ஏழு நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றில் கோரவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஈரான் பிரஜைகளிடம் விசாரணைகளை நடத்துவதற்கு ஈரான் தூதுவராலயத்திடம் இருந்து மொழிபெயர்ப்பு உதவிகளையும் பெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
தென் கடற்பரப்பில் ஹெரொயின் போதைப்பொருளுடன் ஈரான் கப்பலொன்று நேற்று கைப்பற்றப்பட்டதுடன், அக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
மேலும் இதன்போது ஈரானிய பிரஜைகள் 9 பேர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.