அரசாங்கத்தை அசைக்க முடியாது – ஜோன் அமரதுங்க!

280 0

83910_img5471-720x4803இலங்கை ஜனநாயக நாடு எவருக்கும் எந்த இடத்திற்கு சென்று கூட்டங்களை நடத்த முடியும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

தெஹிவளை – கல்கிஸ்சை பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சரிடம் இரத்தினபுரியில் கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்தும் கூட்டம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதற்கு முன்னரும் கூட்டு எதிர்க்கட்சி பாத யாத்திரை நடத்தியது. அவர்கள் எப்படி கத்தினாலும் அரசாங்கம் பலமாக உள்ளது.

அரசாங்கத்தை அசைக்க முடியாது எனவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.