இலங்கைக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் வீசா தள்ளுபடி உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸின் ராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகள் ஒருவர் மற்றைய நாட்டில் முன்கூட்டியே வீசாவை பெறாமல் சென்று 30 நாட்களுக்கு தங்கியிருக்க முடியும்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான 55 வருட உறவில் இது முக்கிய உடன்படிக்கையாக கருதப்படுகிறது.
பிலிப்பைன்ஸின் வெளியுறவு செயலாளர் பேர்பெக்டோ ஆர் யாசே மற்றும் இலங்கையின் தூதுவர் அருணி ரணராஜா ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.