அரசாங்கத்தில் இணையும் தொண்டா, முத்து, டக்ளஸ்!

486 0

thondamannn-680x365நாடாளுமன்றத்தில் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பிரேமலால் ஜயசேகர, சிறிபால கம்லத் ஆகியோரே அரசாங்கத்தில் இணைந்த கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு வங்கி இருக்கும் பிரதேசங்களின் அபிவிருத்திக்காக நிதியை வழங்குமாறு அரசாங்கத்தின் உயர்மட்டம் நிதியமைச்சு அறிவித்துள்ளதாக பேசப்படுகிறது.