அப்பாவை கொலை செய்ய துமிந்தவிற்கு சில உயர் அதிகாரிகள் ஆதரவு

368 0

hiru-450x251“என்னுடைய அப்பாவை கொலை செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு சில உயர் அதிகாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர குற்றம்சுமத்தியுள்ளார்.

பாரதலக்ஷ்மனின் நினைவு தினமான இன்று (08) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே ஹிருணிக்கா இதனை தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச் செயல்களுக்கு மறைமுகமாக உதவி செய்த நபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இதன் போது ஹிருணிக்கா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சம்பவம் இடம் பெற்ற போது சில்வாவின் மருத்துவ பரிசோதனைகளை சமர்ப்பித்த வைத்தியர்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளவு்ளளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாரதலக்ஷ்மன் கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கடந்த மாதம் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது.சில்வா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் மேன்முறையீடு செய்திருந்தார்.