எதிர்வரும் நாட்களில் மேலும் 27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டதன் காரணமாக 07 பில்லியன் ரூபா அந்நியச் செலாவணியை கட்டுப்படுத்திக்கொள்ள முடிந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
ஜா-எல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
விலை குறைக்கப்பட்ட மருந்து வகைகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பட உள்ளதாக அமைச்சர் முன்னதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.