அமெரிக்காவில் நடைபெறும் “தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமையுடன் வாழவேண்டும் ” எனும் கருத்தரங்கில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பங்கேற்பு

411 0

உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது அகவை நிறைவையொட்டி அமெரிக்காவில் நடைபெறும் வெள்ளிவிழாவில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் சார்பில் அதன் வெளிவிவகார இணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் கலந்துகொள்கின்றார். தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பேணிப் பாதுகாத்து மேலும் செழிப்புடன் வளர்வதற்காகவும்; உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களின் நலன்களுக்காகவும்; இவற்றுடன் மிகவும் முதன்மையான குறிக்கோளான தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து, தன்னாட்சி உரிமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவும் உலகின் பல நாடுகளிலும் இருந்தும் தமிழ் பிரதிநிதிகள் , அறிஞர்கள், பெருமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

foto2

மொழிப் பாதுகாப்பு; நடுவண் அரசின் புதிய கல்விக் கொள்கை ; தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு; தமிழர் உரிமைகள்; வெளியுறவுக் கொள்கையும் தமிழர் நலமும் மற்றும் பல தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெறும். சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் ப. இராமசாமி, துணை முதலமைச்சர், பினாங்கு மாநிலம், மலேசியா அவர்களும் , தமிழகத்தில் இருந்து திரு. பெ. மணியரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கம், மற்றும் பலரும் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

foto1 foto3

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை