கிளிநொச்சியில் தொடர்ந்தும் மின்வெட்டு

353 0

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக பகல் வேளைகளில் சுமார் நான்கு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும் இதுகுறித்து எவ்வித முன்னறிவித்தல்களும் வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

நீண்ட நேர மின்வெட்டு காரணமாக வர்த்தகர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவும் நிலையில், மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் 4 மணிநேரம் வரை தொடர்ச்சியான மின்வெட்டினால், சிகை அலங்கரிப்பு நிலையங்கள், தையல் நிலையங்கள் என பல்வேறு தொழில்சார் பாதிப்புக்களும் ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறாக மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நிலையில், உள்ளூர் உற்பத்திகளை பாதுகாக்கவும், உற்பத்தி மேற்கொள்வதிலும் பெரும் சவால் நிலவுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தடையற்ற மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபையினர் வழங்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.