மியான்மர் மீதான பொருளாதார தடையை நீக்கியது, அமெரிக்கா

297 0

201610080907310495_obama-announces-lifting-of-us-sanctions-on-myanmar_secvpfராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழான ஆட்சியை காரணம்காட்டி முன்னர் மியான்மர் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையை நீக்கி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழான ஆட்சியை காரணம்காட்டி முன்னர் மியான்மர் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் (பர்மா) முன்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழான ஆட்சிமுறை அமலில் இருந்தது. இதை காரணம்காட்டி அந்நாட்டின்மீது அமெரிக்கா பல்வேறு வகையிலான பொருளாதார தடைகளை விதித்திருந்தது.

அரசியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூகி விடுதலையடைந்ததை தொடர்ந்து அங்கு நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான கட்சி பெரும்பான்மையான வெற்றியைபெற்று அங்கு ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், மியான்மர் நாட்டின் மீது முன்னர் விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

இதுதொடர்பான உத்தரவை நேற்று பிறப்பித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள விளக்கக் கடிதத்தில், ‘மியான்மர் நாட்டில் முன்னர் நிலவிவந்த தேசிய அவசரநிலை பின்னர் 2015-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலையடுத்து தற்போது மாற்றம் அடைந்து. அங்கு ஜனநாயகம் மேலோங்கி வருவதால் மியான்மர் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகள் அனைத்தும் திரும்பப் பெறப்படுகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.