எப்பொழுதும் பெரும்பான்மையின் கருத்தை நடைமுறைப்படுத்தச் சென்றால் அது ஜனாநாயகத்தின் இறுதியாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.
பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றால் பெரும்பான்மையினரின் கருத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பலர் எண்ணினாலும், சிறுபான்மைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பெரும்பான்மையின் கருத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இலகுவாக ஆட்சி செய்வதற்கு ஆட்சியாளர்கள் குல பேதம், மத பேதம், இன பேதம் என்று பிரித்து மக்களின் எண்ணங்களில் நுழைத்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.