அமெரிக்கா- இந்தியா சார்பான இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சியாகவே ஐ.நா.வின் புதிய தீர்மானம் அமைந்துள்ளதாக வலி. வடக்கு மீள்குடியேற்றக்குழுத் தலைவர் சஜீவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டதையடுத்து, ஜெனிவாவில் ஊடகம் ஒன்றிட்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்கா- இந்தியாவின் நலன்களை பாதுகாக்கும் வகையிலேயே அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.