மொராக்கோ பாராளுமன்ற தேர்தல்: பிரதமர் கட்சி மீண்டும் வெற்றி

332 0

201610081101541431_pjd-wins-morocco-parliamentary-elections_secvpfமொராக்கோ பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.ஆப்பிரிக்க நாடான மொராக்குவாவில் கடந்த 2011-ம் ஆண்டு வரை மன்னர் ஆட்சி இருந்து வந்தது. இந்த நிலையில் அரபு நாடுகளில் ஏற்பட்ட புரட்சியை தொடர்ந்து மன்னர் 5-வது முகமது ஜனநாயக முறையில் மக்களாட்சியை ஏற்படுத்த சம்மதித்தார்.

அதை தொடர்ந்து அரசியல் சட்டம் மறு சீரமைக்கப்பட்டு ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தது. அதில் பிஜேடி கட்சி வெற்றி பெற்றது. அதன் தலைவர் அப்தெலிலா பென்கிரேன் பிரதமர் ஆனார்.

அவரது பதவிக்காலம் முடிந்ததை யொட்டி சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆளும் பிஜேடி கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

ஆளும் பிஜேடி கட்சி 99 இடங்களிலும், எதிர்கட்சியான மாடர்னிட்டி கட்சி 80 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கன்சர்வேடிவ் இஸ்டிக்லால் கட்சிக்கு 31 இடங்களே கிடைத்தன.

இதன் மூலம் பிஜேடி கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் பென்கிரேன் தனது கட்சி 2-வது தடவையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளதாக பெருமிதத்துடன் கூறினார்.