வாழும் கலை அமைப்பின் நிறுவனரும் ஆன்மிக குருவுமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு, லண்டனில் உள்ள தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் (என்.ஐ.எஸ்.ஏ.யு.) சார்பில் ‘கௌரவ பெல்லோஷிப்’ என்ற உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.உலக அமைதிக்காகவும், இந்திய கலாச்சாரத்தை வளர்ப்பதற்காகவும், வன்முறை இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்காகவும் அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்), வாசுதேவ குடும்பகம் (உலகம் ஒரே குடும்பம்) என்ற கொள்கைகளின் அடிப்படையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தொடர்ந்து சேவையாற்றி வருவதாகவும், அவரது வழிகாட்டுதல்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் இந்த கொள்கைகள் மேலும் சென்றடையும் என்றும் என்.ஐ.எஸ்.ஏ.யு. தலைவர் சனம் அரோரா தெரிவித்துள்ளார்.