அழகிகளைப்பற்றி ஆபாசப் பேச்சு: மன்னிப்பு கேட்டார், டொனால்ட் டிரம்ப்

310 0

201610080948191354_trump-apologizes-for-lewd-talk-caught-on-live-microphone-in_secvpfஅழகான பெண்களுடன் உறவுவைத்துக் கொள்வது தொடர்பாக அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த அருவெறுக்கத்தக்க ஆபாசக் கருத்து அவரது மைக்ரோபோன் வழியாக கசிந்ததையடுத்து, தனது கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் அடிக்கடி அழகி போட்டிகள் மற்றும் மாடலிங் விழாக்களை நடத்தி தனக்கு சொந்தாமன சேனல்களில் வெளியிட்டு வந்துள்ளார்.

அவ்வகையில், கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது, அழகான பெண்களுடன் உறவுவைத்துக் கொள்வது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

ஸ்காட்டி நெல் ஹூகேஸ் என்ற அழகியைப்பற்றி தனிப்பட்ட முறையில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் அவர் வெளியிட்ட மிகவும் கீழ்த்தரமான இந்த ஆபாச கருத்தை டிரம்பின் உடையில் அணிந்திருந்த மைக்ரோபோன் வழியாக ஒட்டுகேட்டு, அவரது அதிருப்தியாளர்கள் அப்போது பதிவு செய்து வைத்திருந்தனர்.

ஏற்கனவே, பெண்களைப்பற்றி மிகவும் கீழ்தரமாக விமர்சிக்க கூடியவர் என்ற பட்டப்பெயரை பெற்றுள்ள டிரம்பின் இந்த சர்ச்சைப் பேச்சை உள்ளடக்கிய வீடியோ, அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு தற்போது ‘ஹல்வா’வாக அமைந்துள்ளது.

இதைப்போன்ற பெண்ணியத்துக்கு எதிரானவரையா, இந்த நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க போகிறீர்கள்? என சகட்டுமேனிக்கு டிரம்பை ஹிலாரி போட்ட்டுத்தாக்கி வருகிறார்.

இந்நிலையில், அழகான பெண்களுடன் உறவுவைத்துக் கொள்வது தொடர்பாக முன்னர் தெரிவித்த கருத்துக்கு தற்போது டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

’பல ஆண்டுகளுக்கு முன்னர் தனிப்பட்ட முறையில் நான் தெரிவித்த கருத்தானது, தற்போது அரசியல் சாயம் பூசப்பட்டு சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. இதைவிட மோசமான கருத்தை ஒருமுறை ஹிலாரி என்னிடம் முன்னர் தெரிவித்துள்ளார். அதை ஒப்பிட்டுப் பார்க்கையில் நான் கூறியது ஒன்றுமே இல்லை.

எனினும், என்னுடைய கருத்தால் யார் மனமாவது காயப்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.