சர்வதேசத்திடம் அடிபணிந்து சென்றமை வெட்கப்பட வேண்டிய விடயம்!

355 0

நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்தின் மத்தியில் அடிபணிந்து சென்றமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் குறிப்பிட்ட அவர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க,  நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரது நோக்கங்கள் நிறைவேறவுள்ளன. 

இலங்கைக்கு எதிராக தற்போது சர்வதேச நாடுகள் த்களின் கடுமையான அதிருப்தியினை  வெளிப்படுத்தியுள்ளன. சர்வதேசத்தின் உறவுகளுக்கான நாட்டின் இறையாண்மையினை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. 

யுத்தம் முடிவடைந்த பின்னர் பொறுப்புக் கூறும் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் இனநல்லிணக்கம் முன்னிட்ட விடயங்களை அரசாங்கம் சர்வதேசத்தின் மத்தியில் கொண்டு செல்ல தவறி விட்டது என்றார்.