எதிர்வரும் 5 வருட கால பகுதியில் இலங்கையின் பொருளாதார இலக்கை பூர்த்தி செய்யக் கூடிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் வட்டி வீதத்தை குறைப்பதற்கும் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் நிதி தொடர்பில் ஒழுக்க நடைமுறைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி இலக்கை எட்ட வேண்டுமாயின் புதிய துறைகளை அடையாளம் காண்பதும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்
2016 ஆம் ஆண்டில் இலங்கை செலுத்த வேண்டிய கடனுக்கான தவனை கொடுப்பனவு அனைத்தையும் செலுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
கொழும்பில் நடைபெற்ற பயர் சைட் செட் 2019 என்ற தொனிப்பொருளில் வர்த்தக கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய வர்த்தக சபையும் வர்த்தக பத்திரிகை நிறுவனம் ஒன்றும் இதனை ஏற்பாடு செய்துள்ளது. முன்னணி வர்த்தகர்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். மகா நாட்டின் அடிப்படை நோக்கம் நாட்டின் பொருளாதாரத்தில் புதிய வழி முறைகளில் கவனம் செலுத்துவதாகும். நாட்டின் ஏற்றமதி வருமானத்தை அதிகரிப்பதே எம் மத்தியில் உள்ள சவாலாகும் என்று தெரிவித்த பிரதமர் கடந்த சில வருடங்களில் நாட்டின் வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறாத நிறுவனங்கள் பல வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வர்த்தக துறை தொடர்பில் தற்பொழுது உள்ள நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். நமக்கு கபயனுள்ள வகையில் இத்துறையை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முதலீடுகள் முக்கியமான காரணி எனவும் எதிர்காலத்தில் முதலீட்டாளர்களுக்கு வரி நிவாரணங்கள் வழங்கத் தயார் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.