மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் விவகாரத்தில் சபையில் ஆளும் எதிர் கட்சிகளிடையில் வாக்குவாதம் நிலவியது.
அர்ஜுன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர சிங்கபூர் பிரதமர் ஒத்துழைப்பு வழங்கவில்லை என ஜனாதிபதி கூறுகின்ற போதிலும் சிங்கபூர் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக ஆவணங்கள் இலங்கை சமர்ப்பிக்கவில்லை என்றே சிங்கபூர் அரசாங்கம் கூறியுள்ளது.
ஒரு ஆவணத்தை கூட தயாரிக்க அரசாங்கத்தால் முடியவில்லையா, ஆகவே இது குறித்து அரசாங்கம் பதில் கூற வேண்டுமென ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் சபையில் கேள்வி எழுப்பினர்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆரம்ப கைத்தொழில் சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு, விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகியவற்றின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டனர் .-