சிறப்பு விருந்தாளியாக சீனா செல்லும் கோத்தபாய!

326 0

சீனாவின் அழைப்பின் பேரில் அங்கு நடைபெறும்  7வது சியான்ங்சென் பாதுகாப்பு மாநாட்டில் பிரதம விருந்தினராக இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கோத்தாபாய   ராஜபக்ச  பங்கேற்கவுள்ளார்.

இந்த மாநாடு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை  சீனாவில் நடைபெறவுள்ளது .

குறித்த மாநாடு , பாதுகாப்பு பலப்படுத்தலும் ஒத்துழைப்பும் என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது.

இதேவேளை மாநாட்டுக்காக செல்லும் கோத்தாபாய , எதிர்வரும் 25 நாட்களுக்கு சீனாவில் தங்கியிருப்பார்  என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியும் பங்கேற்கிறார்.