பாலியல் லஞ்சம் கொடுத்து 543 மில்லியனை கொள்ளையடித்த ராஜபக்சர்கள்!

310 0

namal-mahinda2017ம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்காக 2011ம் ஆண்டு இடம்பெற்ற வாக்கெடுப்பிற்கான ஆரம்ப நடவடிக்கைகளில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது அரச பணம் மற்றும் நன்கொடையாளர்களின் 680 மில்லியன் ரூபாய் பணம் இலங்கை வங்கியின் கொழும்பு பெரு நிறுவன கிளையின் 71199250 என்ற இலக்கத்தில் பொதுநலவாய விளையாட்டு என்ற பெயருடனான கணக்கில் வைப்பு செய்யப்பட்டிருந்தது.

எனினும் தற்போது அந்த கணக்கில் 246 மில்லியன் ரூபாய் மாத்திரமே மீதமாக உள்ளதென பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு தகவல் வட்டாரங்களின் ஊடாக அறிந்து கொள்ள முடிந்தன.

குறித்த காமன்வெல்த் கேம் கணக்கினை நடத்தி செல்வதற்காக காமன்வெலத் கேம் குழு நிறுவனம் ஒன்றை உருவாக்கியுள்ள நிலையில், கூட்டுறவு தலைவர்களாக அப்போதைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே செயற்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அந்த குழுவின் உறுப்பினராக செயற்பட்டுள்ளதாக இந்த கணக்கிற்காக அரச பணம் 118 மில்லியன் ரூபாய் வைப்பு செய்யப்பட்டிருந்தது.

எவ்வித வெளிப்படைத்தன்மையுமின்றி இந்த பணம் செலவிப்பட்டுள்ள நிலையில், உறுப்பு நாடுகளின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகளுக்கு பல்வேறு வசதிகள் மற்றும் பாலியல் லஞ்சம் (இலங்கை, ரஷ்யா மற்றும் யுக்ரேன் நாட்டு பெண்கள்) வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதற்காக 35 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக உறுதியாகியுள்ளது.

அந்த வாக்கெடுப்பிற்கான நடவடிக்கைக்காக கிட்டத்தட்ட 150 பேர் சென்ட் கிரிஸ் தீவிற்கு சென்றுள்ள நிலையில் நாமல் ராஜபக்ச தலைமையிலான அமைப்பாளர் வாரியத்திற்கு மேலதிகமாக அனார்கலி ஆகர்ஷத மற்றும் அழகான பெண்கள் பலர் சென்றுள்ளனர்.

எப்படியிருப்பினும் அந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக இயலுமை இலங்கையிடம் இல்லை என கூறி, பொதுநலவாய விளையாட்டு குழு அந்த போட்டிகளை நடத்த அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரத்தை தெரிவு செய்துள்ளது.