ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தொடர்பான தகவல்களை சபையில் சமர்ப்பிக்குமாறு ஜே.வி.பி எம்.பி நலிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு அரசாங்கம் இருவாரகால அவகாசத்தை கோரியது.
நேற்று வியாழக்கிழமை கூடிய பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது வெளிநாட்டு அலுவல் அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஆளும் கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உதயங்க வீரதுங்க தொடர்பான கேள்விகளில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் எவை? அவருக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கை தாமதம் அடைவதற்கான காரணங்கள் என்ன? இவரை கைது செய்ய இண்டர்போல் உதவி கோரப்பட்டுள்ளதா? என்பன உள்ளடங்குகின்றன. வெளிவிவகார அமைச்சர் சபைக்கு சமுகம் கொடுக்காமையினால் கயந்த கருணாதிலக பதிலளித்தார்.