மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக இலங்கையின் முயற்சிகளுக்கு தாம் ஆதரவு வழங்குவதாக சீனா தனது நிலைப்பாட்டினை அறிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 40ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய போதே சீன பிரதிநிதி இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “மனித உரிமைகளை ஊக்குவிக்க இலங்கை மேற்கொண்டுள்ள முயற்சிகளை சீனா அங்கீகரிக்கிறது .
பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வறுமையை அகற்றவும் இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை சீனா கவனத்தில் எடுத்துக் கொண்டது. பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்க இலங்கை ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக சர்வதேச சமூகம் புறநிலையாகவும், பாரபட்சமற்றதாகவும் கருத்திற்கொண்டு, இலங்கை எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டவேண்டும்” என சீன பிரதிநிதி கூறினார்.