மலையகத்தின் மாற்றத்திற்காக எதிர்கால சந்ததியினர் முன்வர வேண்டும்-பழனி

232 0

மலையகத்தில் மாற்றத்தை கொண்டுவரவேண்டுமானால் மலையகத்திற்கும் மலையக மக்களுக்கும் துரோகம் செய்யும் தலைவர்களிடம் இருந்து மலையகத்தை  மாற்றியமைக்க எதிர்கால சந்ததியினர்கள் முன்வரவேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்துள்ள மகளிர் தின விழா, நேற்று அட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மலையகத்தில் உள்ள பெண்கள் மகளிர் தினத்தில் கலந்து கொண்டது போல் அரசியலிலும் கலந்து கொண்டுமலையகத்தில் முன்மாதிரியாக விளங்கவேண்டும் மலையக மக்கள் அரசியல் ரீதியாக எமக்கு அதிகாரத்தையும் அமைச்சி பதவியையும் பெற்று கொடுத்து இருக்கிரீர்கள் அதன் முலமாக மலையகத்தில் எவரும் செய்யாதவேலைதிட்டதை நாங்கள் கடந்த முன்று வருடங்களில் முன்னெடுத்துள்ளோம்

அந்தவகையில் தொழிற்சங்க ரீதியாக எமக்கு மேலும் பல அதிகார்தை வழங்கினால் தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்கமுடியும் கடந்த வாரம் அட்டன் நகரில் இடம் பெற்ற மகளிர்தின விழாவில் மலையகத்தில் உள்ள தொழிற்சங்கத்தை சார்ந்த ஒருவர் கூறியிருக்கிறார் தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தமிழ் முற்போக்கு கூட்டனி தலையிடாவிட்டால் 1500ருபா பெற்று தருவதாககூறுகிறார்கள் சிலர் மலையகத்தில் மாற்றம் வேண்டும் என கூறி சிலர் முன்வந்துள்ளார்கள் அதிலும் சிலபேர் எங்களுக்கு கானிவேண்டாம் வீடுவேண்டாம் என கூறி கொண்டு தலைவர்கள் என்ன பொய்சொன்னாலும்அதனை கேட்டு கொண்டு இருக்கும் கூட்டமும் இருக்கிறது

இன்று நாட்டில் பெண்கள் பல்வேறு அபிவிருத்தியோடு வாழ்ந்து வருகிறார்கள் ஆனால் மலையகத்தில் உள்ள பெண்கள் கொழுந்து பறிப்பதும் காலையில் இருந்து மாலைவேலை தொழில்புரிவதை வழக்கமாக செய்துவருகிறார்கள் இதற்கு காரனம் மலையகத்தில் உள்ள தொழிங்சங்க தலைவர்கள் அந்த தலைவர்கள் நினைத்து இருந்தால் மலையகத்தில் உள்ள பெண்களை ஒரு மாற்று வழிக்கு கொண்டு வந்திருக்கலாம் ஆனால்தலைவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு தொடர்ந்தும் மலையக பெண்களை தேயிலை மலையில் கொழுந்து பறிக்கும் தொழிலை மேற்கொள்ளும்படி அடிமையாக வைத்து இருக்கிறார்கள்

ஆதனை மாற்றவேண்டும் என்று தான் நாங்கள் வந்து போராடி கொண்டிருக்கிறோம் மலையகத்தில் உள்ள பெண்கள் எத்தனை வருடங்கள் தொழில்புரிந்தாலும் கம்பணி காரர்கள் எமது  தொழிலாளர்களுக்கு நியாயமானசம்பளத்தை வழங்கமாட்டார்கள் அதற்கு காரனம் சில தொழிற்சங்கங்கள் துனைபோகிறது நாங்கள் தொழிற்சங்கத்துக்கு அப்பால் பட்டு அரசாங்கத்தோடு கலந்தரையாடி 50ருபா பெற்று கொடுத்துள்ளோம் நாங்கள் பெற்றுகொடுத்த 50ருபா எதிர் வரும் மே மாதம் எமது மக்களுக்கு கிடைக்குமென குறிப்பிட்டார்