மக்களின் பணத்தினை சுருட்டிக்கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது!

304 0

44994_siva-okஎமது மக்களின் கோடிக்கணக்கான பணத்தினை சுருட்டிக்கொண்டு செல்வதற்கு அனுமதிக்கமுடியாதென வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறுதெரிவித்தார்.

எதிர்வரும் 09ம் திகதி யாழ்.மாநகச சபை வளாகத்தில் தென்னிந்திய பிரபல பாடகர்எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மாபெரும் இசைநிகழ்ச்சி நடாத்தப்படவுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ள ஏற்பாட்டாளர்கள் இசை நிகழ்ச்சிக்கான அனுமதிசிட்டையினை 10 ஆயிரம் ருபாவில் இருந்து 1000 ரூபா வரை விற்பனை செய்கின்றார்கள்.

போரினால் பாதிக்கப்பட்டு நீறு பூத்த நெருப்பாக தற்போது இருக்கும் எமது மக்களின்பணத்தினை சூறையாடிச் செல்வதற்கு தென்னிந்திய பாடகர் குழாம் முயற்சிப்பதாக கூறினார்.

போரின் பின்னர் எமது நிலைமைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

போரின் பின்னர்பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது சொத்துக்களை இழந்து உள்ள நிலையில், இழப்புக்களைசீர் செய்வதற்கு பல லட்சம் ரூபா தேவைப்படும் நிலைமையில், களியாட்ட நிகழ்ச்சியை செய்பவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அபிவிருத்திக்கு உதவ முன்வர வேண்டும்.

களியாட்ட நிகழ்வுகளின் மூலம் சேகரிக்கப்படும் நிதியினை போரினால் பாதிக்கப்பட்டமக்களின் அபிவிருத்திக்கு வழங்கி உதவ வேண்டும்.

அவ்வாறான உதவிகளை வடமாகாண சபையின்மூலம் செய்யலாம். இல்லாவிடின் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களைப்பெற்று நேரடியாக அவர்களுக்கான உதவிகளைச் செய்யமுடியும்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு நேர சாப்பாட்டிற்காக காத்திருக்கும்நேரத்தில், 10 ஆயிரம் ரூபாவிற்கு அனுமதிச் சிட்டைகளை விற்பனை செய்யும் போது அந்தப்பணம் கறுப்புச் சந்தைக்கு சென்று விடும்.

எனவே, களியாட்ட நிகழ்வின் மூலம் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை அல்லது இரண்டுபகுதியை போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்குவழங்க வேண்டுமென்றும் அவ்வாறு அரசியல் வாதிகளின் ஊடாக வழங்க விரும்பாவிடினும்,தனிப்பட்ட ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு ஏற்பாட்டாளர்கள் முன்வர வேண்டுமென்றும்,அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான இசை நிகழ்வுகளுக்காக இலங்கைக்கு வரும்கலைஞர்கள், வட மாகாணத்தில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவ முன்வரவேண்டுமென்றும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.