சுந்தர் பிச்சையின் குவோரா கணக்கை ஊடுருவிய அவர்மைன் குழு

16203 117

201606271836221707_Google-CEO-Sundar-Pichais-Quora-account-hacked_SECVPFகூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் குவோரா கணக்கை அவர்மைன் என்ற குழு ஹேக் செய்துள்ளது. இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் மேம்பாடு மற்றும் நவீனத்துவம் அதிகரித்து வரும் இந்த யுகத்தில், பாஸ்வேர்டுகள் இல்லாமலேயே ஊடுருவும் இணையதள திருடர்கள் அதிகரித்துள்ளனர். குறிப்பாக பிரபலங்களின் வலைத்தளங்களே இவர்களின் இலக்காக இருக்கிறது.பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸ்கர்பெர்க்கின் டுவிட்டர் மற்றும் பின்டரஸ்ட் கணக்குகளை அவர்மைன் என்ற ஹேக்கர் குழு முடக்கியது. அதே குழு தற்போது கூகுள் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் குவோரா கணக்கினுள் ஊடுருவி செய்திகளை பதிவு செய்துள்ளது. அவரது குவேரா பதிவுடன் இணைக்கப்பட்டிருந்த டுவிட்டுகள், அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் இருப்பதைப்போன்றே தெரிந்தது. இதன்மூலம் அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டது தெரியவந்தது.

பின்னர் அந்த கணக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, அதில் உள்ள டுவிட்டுகள் சில மணி நேரத்தில் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதுபோன்ற ஹேக்கிங் கும்பல், அவர்களின் கணக்குகளை எப்படி அணுகுகிறார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. பிரபலங்களின் பிரவுசர்களில் இருந்து பாஸ்வேர்டுகளை பல்வேறு வழிகளில் கண்டுபிடித்துவிடுவது இணையதள பாதுகாப்புக்கு உண்மையிலேயே அச்சுறுத்தல்தான்.

Leave a comment