ஜெகநாதனின் உடல் நேற்று நல்லடக்கம்!

300 0
antony-1வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் மரியாம்பிள்ளை அன்ரனி ஜெகநாதனின் பூதவுடல் நேற்று மாலை 6.00 மணிக்கு உண்ணாப்பிலவு கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பெருந்திரளான மக்கள்  முல்லைத்தீவு நகரிலுள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கரைதுறைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் வைக்கப்பட்டு பின்னர் புனித இராஜப்பர் ஆலயத்தில் விசேட ஆரதனைகள் இடம்பெற்று பின்னர் உன்ணாப்புலவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.