ஊடகங்கள் தவறான வதந்திகளை மக்களிடையே பரப்புவதனை நிறுத்திக்கொள்ளவேண்டும் என பிரதமர் ரணில் வேண்டுகோள் விடுத்தார்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர்கள் இருவர், உட்பட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றோர் கட்டணம் செலுத்தாமல், விமான படைக்கு சொந்தமான விமானங்களில் முறைகேடாக பயணம் செய்ததாக குற்றச்சாட்டுகள் பல ஊடகங்களில் அண்மையில் பரவிவந்தது.
குறித்த விடயம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் ரணில்இதனைக் கூறினார்.
மேலும் நாட்டில் ஊடகங்கள் உண்மைத்தன்மை அற்ற செய்திகளையும் வதந்திகளையும் மக்களிடையே பரப்பி வருகின்றது இவை நிறுத்தப்படவேண்டும்.
விமான படைக்கு சொந்தமான விமானங்களில் முறைகேடாக பயணம் செய்தமை தொடர்பில் கூறப்பட்ட கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் வதந்திகளே எனவும் பிரதமர் தெரிவித்தார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க பிரதமரின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,
“குறித்த விடயம் வதந்தியாக தெரியவில்லை, அவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது” என்ற கருத்துகளை முன்வைக்கும் போது அவருடைய கருத்துகள் நகைச்சுவையாக பிரதமரால் மாற்றப்பட்டது தொடர்ந்து அவரின் ஒலிவாங்கி சபாநாயகரால் நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
முறைகேடான விமானப்பயணம் தொடர்பில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டவர்கள் பிரதமர் ரணிலுக்கு வேண்டப்பட்டவர்களே என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கதாகும்