வவுனியாவில் இடம் பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன் இசைக்கப்பட்ட தேசிய கீதத்தை நான்கு மதத்தலைவர்களும்புறக்கணித்துள்ளனர்.
இந்த நிகழ்வில், தமிழ் மொழி பேசுபவர்களே அதிகமாக கலந்து கொண்டுள்ள போதும், சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாமை குறித்து நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
குறித்த நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர்வே.இராதாகிருஸ்ணன், வட மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் அதிதிகள் வரிசையில் அமர்ந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
சில மதகுருமார் எழும்ப முற்பட்ட போதும் இருப்பவர்களைப் பார்த்து தாமும் அமர்ந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு நாட்டின் தேசிய கீதத்திற்கு மத குருமார்கள் மரியாதை செலுத்துவதில்லையா என்ற கேள்வியை இதன்போது பலர் எழுப்பியுள்ளனர்.