யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று ஆர்பாட்டம்!

332 0

image-0-02-06-392cf57ba3202a0260a026f44790f0f993167ed62aa75b0fb44ac34334ec39b9-v_resizedகடல் உணவு சார்பான பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து உள்ளூர் கடல் உணவு நிறுவன ஊழியர்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை  காலை 10 மணியளவில் ஆர்பாட்டம் ஒன்றினை நடாத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை ஐனாதிபதியிடம் கையளிப்பதற்காக அரசாங்க அதிபரின் பிரதிநிதியிடம் கையளித்தனர். பின்னர் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை பிரதிப் பணிப்பாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து தமது மஜரை கையளித்தனர்.

அந்த மஜரில் குறிப்பிடப்பட்டதாவது இந்திய நிறுவனங்கள் நேரடியாக இங்கே வந்து எமது கடல் வளத்தைச் சுரண்டி, தமது நாட்டில் வேலைவாய்ப்பினை வழங்குவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

அவர்கள்  அந்த நிறுவனத்தை நிறுவி முழுமையான பயன்பாட்டினை எமது நாட்டிற்கு வழங்குவதை ஆதரிக்கிறோம் அவ்வாறு இல்லாது விடின் அவர்களின் செயற்பாட்டினை உடனடியாக அவர்களின் செயற்பாடுகள் நிறுத்தப்படல் வேண்டும். எங்கள் வழமானது எப்போதும் எங்கள் வாழ்வாதாரமாக அமையவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.

அத்தோடு இலஙங்கையில் பலவருடங்களாக  இயங்கிவரும் உள்ளூர் நிறுவனங்களே போதிய கடல்வளங்கள் இல்லாது இருக்கின்றநிலையில் மேலும் வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டிபோட்டு கடல்  வளத்தை சுரண்டுவதால் அனைத்து நிறுவனங்களும்  இழுத்து மூடும் அபாயம் உருவாகும் என அஞ்சுகிறோம்.

இலங்கை அரசு அதனை கருத்தில் கொண்டு வளத்திற்கேற்ப நிறுவனங்களை வரையறைசெய்து ஆரோக்கியமான நீண்டகால செயற்பாட்டிற்கு வழிவகுக்கவேண்டும். இதன் மூலம் எமக்கான நீண்டகால வாழ்வாதராம் உறுதிப்படுத்தப்படும் என்று நம்பி நிற்கின்றோம்.

புதிதாக அல்லது தற்காலிகமாக வருகின்ற நிறுவனங்களின் நடவடிக்கைகள் நிரந்தரமாக நாங்கள் நம்பியிருக்கும் எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காதவகையில் அமைய வேண்டும்.

கடந்த காலங்களிலும் எங்கள் பிரதேசத்தில் கடலுணவு சார்பான சில பன்னாட்டு நிறுவனங்கள் செயற்பட்டு இறுதியில் நுற்றுக்கணக்கானோரை நட்டாற்றில் விட்டுச் சென்றமை எங்கள் நினைவுகளில் உள்ளமையினால் தற்போது வருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் மீண்டும் குழப்பகரமான செயல்களில் ஈடுபட்டு இன்று எங்களுக்கு பல வருடங்களாகவே வாழ்வாதாரம் வழங்கிவரும் நிறுவனங்களை பூட்டவைத்து நிர்க்கதியாக்கி விடுவார்களோ என அஞ்சுகிறோம்.

ஆகையால் இவ்வாறான புதிய நிறுவனங்களின் செயற்திட்டங்களை பொறுப்புடன் ஆராய்ந்து தற்போது இருக்கும் வேலைவாய்பிற்கு மேலதிமாக வேலைவாய்பினை நீண்டகாலத்திற்கு வழங்கும் பட்சத்தில் அவர்களை உள்வாங்க வேண்டும் என தமது மஜரில் குறிப்பிட்டிருந்தனர்.